விருத்தகிரீஸ்வரர் கோயில் மறு கும்பாபிஷேகம்; பக்தர்களுடன் வெகு விமர்சை!

  • 2 years ago
டந்த மார்ச் 1ஆம் தேதி அதிகாலை ஆலய வளாகத்தில் உள்ள அருள்மிகு விருத்தாம்பிகை சன்னதி விமானம் கலசங்கள் திடீரென்று காணாமல் போனது. நகரின் மத்திய இடத்தில் இருந்த பிரசித்தி பெற்ற கோவிலில் கலசங்கள் மாயமாகி போனது கடலூர் மாவட்டம் முழுவதும் பரபரப்பு அடைய செய்தது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து விருத்தாசலம் போலீசார் மாயமான காலத்தை தேடிவந்தனர். கலசம் காணாமல் போன 3 நாட்களுக்குள் காவல்துறை குற்றவாளியை கண்டுபிடித்து கலசங்களை மீட்டெத்தது. கலசங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தினாலும் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட விமானக் கலசம் மாயமாகிப் போனதை பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியது. மீட்டெடுக்கபட்ட கலசத்தை பரிகாரங்கள் செய்து பிரதிஷ்டை செய்து மறு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் இடையே கோரிக்கை வலுப்பெற்றது.

Recommended