#templevision #tv24 #காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலய பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவ வீதி உலா |

  • 2 years ago
#ஆன்மீகம் #aanmeegam #காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்வத்தின் 6-ஆம் நாளான இன்று ஏலவார்குழலியுடன் ஏகாம்பரநாதர் ,63 நாயன்மார்களுடன் நான்கு ராஜ வீதிகளில் திரு வீதியுலா

வழிநெடுங்கிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து சாமி தரிசனம்


தென்னிந்திய அளவில், கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலக பிரசித்தி பெற்றதும், பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்குகின்ற காஞ்சிபுரம் ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்தாண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவமானது
கடந்த 8-ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கி அனுதினமும் காலை மாலை என இருவேளைகளில் பல்வேறு வாகனங்களில் உற்சவர் ஏகாம்பரநாதர் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில் உற்சவத்தின் 6ம் நாளான இன்று காலை ஏலவார்குழலி, ஏகாம்பரநாதர், அறுபத்தி மூன்று நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் கோவிலிருந்து புறப்பட்டு நான்கு ராஜவீதிகள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்தார். ஏலவார்குழலியுடன் ஏகாம்பரநாதர்,63நாயன்மார்களுடன் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து சிவாச்சாரியர்கள் படைச்சூழ் மேளத்தாளங்கள் முழங்க சென்றது நகரமே திருவிழா போல் காட்சிதளித்தது. ஞாயிற்றுக்கிழமை இன்று விடுமுறை என்பதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி காஞ்சிபுரம் மற்றும் அதன் சற்று வட்டார கிராமமங்கள், மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வழிநெடுங்கிலும் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் அதனை யொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். குறிப்பாக ஆறாம் நாளான இன்று இரவு வெள்ளி திருத்தேர் உற்சவமும், அதனைத் தொடர்ந்து நாளை காலை ரதத் தேர் உற்சவமும்,18ஆம் தேதி அதிகாலை பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் முக்கிய உறசவமான் ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.மேலும் அன்றைய தினம் இரவு புண்ணியகோடி விமானத்தில் ஏகாம்பரநாதர் எழுந்தருளலும், 20-ஆம் தேதி காலை தீர்த்தவாரி உற்சவத்துடன் இவ்விழாவானது நிறைபெறுகிறது. இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் வெகு சிறப்பாக செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended