உச்சக்கட்ட போர்; கதி கலங்கும் மாணவர்கள்; பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை !

  • 2 years ago
தருமபுரியை அடுத்த இலக்கியம்பட்டி பகுதியை சேர்ந்த மாதையன் என்பவரின்மகன் லோகரசன், அரூரை அடுத்த நாசன்கொட்டாய் பகுதியை சேர்ந்த தமிழ்மாறனின் மகள் கவிநிலவு, பொம்மிடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அன்பழகனின் மகன் ஜெயகுமார், பெரியசாமியின் மகன் நிதிஷ்குமார், பாலமுருகனின் மகன் முரளிதரன், ஷகிரின் மகன் முகமது உசேன், ரஷிலின் மகன் நிசாருதீன், பாப்பிரெட்பட்டி அடுத்த சக்திநகரில் உள்ள அப்துல் ரஹிமின் மகள் முர்ஷிதா உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள், உக்ரைன் நாட்டில் எம்.பி.பி.எஸ் 2 ஆம் ஆண்டு படித்து வருகின்றனர். தற்போது, உக்ரைன், ரஷியா இடையே நடைபெற்று வரும் போரால், உக்ரைன் நாட்டில் உள்ள தமிழக மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Recommended