#DotCom_Tamil #மீண்டும் மஞ்சப்பை இயக்கம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

  • 2 years ago
#DotCom_Tamil #மீண்டும் மஞ்சப்பை இயக்கம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

நெகி­ழிப் (பிளாஸ்­டிக்) பைக­ளுக்கு மாற்­றாக துணிப்­பை­க­ளின் புழக்­கத்தை மக்­க­ளி­டம் ெகாண்டு வரும் வகை­யில் ‘மீண்­டும் மஞ்­சப்பை’ இயக்­கத்தை சென்னை கலை­வா­ணர் அரங்­கில் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேற்று தொடங்­கி­வைத்­தார்.

இந்நிகழ்­வில், தடை விதிக் கப்­பட்ட நெகி­ழிப் பொருள் களுக்கு மாற்­றாக பயன்­பாட்­டுக்கு கொண்டு வரப்­பட உள்ள பொருள்­கள் குறித்­தும், பொருள்களின் தயா­ரிப்­பா­ளர்­கள் குறித்­தும் கண்­காட்சி இடம்­பெற்­றி­ருந்­தது. சணல், துணி, பனை ஓலை மூலம் தயா ரிக்கப்பட்ட பொருள்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

“மஞ்சள் பை என்பதை யாரும் அவமானமாகக் கருதவேண்டிய அவசியமில்லை. சுற்றுச்சூழலைக் காப்பவரின் அடையாளப் பை தான் இந்த மஞ்சள்பை,” என்று முதல்வர் கூறியுள்ளார்.

சுற்­றுச்­சூ­ழ­லுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தும், ஒரு­முறை மட்­டுமே பயன்­ப­டுத்­தக்­கூ­டிய 14 வகை யிலான பிளாஸ்­டிக் பொருள்­க­ளுக்கு தமி­ழக அரசு கடந்த 2019ல் தடை விதித்­தது குறிப்பிடத்தக்கது.

#Pls Visit my websites
#newzbuz.in

Recommended