#Templevision24 #Tv24 #புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் |

  • 2 years ago
புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம்... சிவ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்...

புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி திருக்கோயில் ஆருத்ரா தரிசன திருநாளை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திர திரு நாளை ஆருத்ரா தரிசன திருநாளாக இந்துக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். குறிப்பாக சைவ சமய சித்தாந்தத்தில் சிவபெருமானுக்கு உகந்ததாகக் கூறப்படும் ஆருத்ரா தரிசன திருநாளில் பெரும்பாலான சிவாலயங்களில் இவ்விழா நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சாந்தநாத சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அங்கு உள்ள உற்சவர் நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், மூலவர் சிவபெருமான் மலர்களாலும் மற்றும் வஸ்திரங்களாலும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்து அருள் பாலித்தார். இதுபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோகர்ணேஸ்வரர் கோயில், திருவேங்கைவாசல் வியாக்கபுரீஸ்வரர், நெடுங்குடி கைலாசநாதர் கோயில், திருவரங்குளம் அரங்குளநாதர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Recommended