கோவை சித்ரா அரங்கில் நீலம்பண்பாட்டு மையம் சார்பில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி

  • 2 years ago
கோவை சித்ரா அரங்கில் நீலம்பண்பாட்டு மையம் சார்பில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய பா.ரஞ்சித், மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை சென்ற ஆண்டு சென்னையில் நடத்திய போது மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தோடு அதில் பங்கேற்ற கலைஞர்களுக்கும் மிகுந்த உற்சாகம் கிடைத்ததன் காரணமாகதான் இந்த ஆண்டு மார்கழி மக்களிசை நடத்தபட்டு வருவதாக தெரிவித்தார்.நேற்று மதுரையில் துவங்கிய போது எதிர்பார்த்தைவிட மக்கள் பெரிய ஆதரவு கொடுத்து மகிழ்ச்சியளிப்பதாகவும், கோவையில் 350 இருக்கைகள் கொண்ட அரங்கில் இந்நிகழ்ச்சியை காண 700 பேர் வந்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். சென்னையில் வரும் 24-ம் தேதி முதல் 31 ம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியில் இதுவரை மேடை ஏற்றாத பழங்குடிகளின் இசையை ஒருநாள் முழுக்க மேடை ஏற்ற இருப்பதாகவும், மக்களிசை சார்பாக எட்டு மரபு சார்ந்த கலைஞர்களை இனம் கண்டு அவர்களுக்கு விருது மற்றும் பணமுடிப்பை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.கலை மக்களுக்கானது என்றும் மக்களுக்கான இசையை கொண்டு சேர்ப்பதுதான் இந்த நிகழ்வின் நோக்கம் எனவும் தெரிவத்த ரஞ்சித் நம்முடன் நம் தெருக்களில் உள்ள இசைவடிவங்களுக்கெல்லாம் ஒரு தகுதி உருவாக்கி வைத்திருக்கிறார்கள் எனவும சில இசைவடிவங்களெல்லாம் தீட்டு என இசைவடிவங்களுக்கான தகுதியை குறைத்துவைத்துள்ளதாகவும் புகார் கூறினார்.. இன்னும் இசை வடிவங்களுக்கெல்லலாம் இன்னும் மேடை கிடைக்காமல் இருப்பதாக கூறிய ரஞ்சித் இந்த இசை வடிவங்களை மேடை ஏற்றுவதுதான் மக்களிசை என்றும் மெயின் ஸ்டீரிமீல் சமூக நீதி பேசும் கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காது என்ற பிம்பம் தற்போது உடைந்திருப்பதாக தெரிவித்தார். தொடரந்து பேசிய பா.ரஞ்சித் குழந்தைகளுக்குதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான சரியான விழிப்புணர்வு இல்லை எனவும் பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேசுவதே இல்லை. பாலியல் துன்புறுத்தல் வந்தால் குழந்தைகளை குற்றவாளியாக்குவது, நீ முதலில் சரியாக இருக்க வேண்டும் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என கூறுவதே முதலில் தவறு எனவும் குழந்தைகளை விட பெற்றோர்களுக்கே முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். மேலும்., பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்தவரை தண்டிப்பதற்கும்,வழக்கு தொடர்வதற்கும் பெற்றோர்கள் தயாராக இருக்க வேண்டும்,குழந்தைகளிடம் பெற்றோர்கள் விலகி இருக்கிறார்களோ என தோன்றுவதாகவும்.குழந்தைகளிடம் பெற்றோர்கள் பேச வேண்டும் எனவும் பா. ரஞ்சித் தெரிவித்தார்..இதனைத்தொடர்ந்து மார்கழியில் மங்களிசை நிகழ்ச்சியை துவக்கி வைத்த ரஞ்சித், தமிழக அரசியலில் மேற்கு மாவட்டத்திற்கு முக்கியமான பங்கு இருப்பதாகவும் இங்கு அம்பேத்கர் சிலையை கூட வைக்க முடியாத சூழ்நிலைதான் இருப்பதாக இங்குள்ள இளைஞர்கள் கூறுவதாகவும், இது தொடர்பாக நாம் ஆய்வு நடத்த வேண்டியிருப்பதாக தெரிவித்தார். பல தொழிலதிபர்கள் கோவையில்தான் உருவாகி இருக்கிறார்கள் என்பதை குறிப்பிட ரஞ்சித், அதே நேரம் சாதி படிநிலைகளை தீவிரமாக கடைபிடிக்கும் பகுதியாக இருப்பது என்பது கவலைப் பட கூடிய விசயமாக இருப்பதாக தெரிவித்தார்..