#templevision24 #tv24 #அய்யர்மலை பல வருடங்களுக்கு பின்னர் நடைபெற்ற தெப்பத் திருவிழா நிகழ்ச்சி |

  • 2 years ago
குளித்தலை அருகே அய்யர்மலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத் திருவிழா நிகழ்ச்சி; கண்ணைக் கவரும் வண்ண விளக்குகளுடன் பக்தர்களுக்கு காட்சி, அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் பிரசித்தி பெற்ற சிவதலமான ரெத்தினகிரீசுவரர் மலைக்கோவில் அமைந்துள்ளது. திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இந்த கோவில் முன்பு உள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் நிறைந்திருக்கும் காலங்களில் தெப்பத் திருவிழா நடத்தப்பட்டு வந்துள்ளது. இறுதியாக கடந்த 2006 ஆம் ஆண்டு இக்கோவிலில் தெப்பத்திருவிழா நடத்தப்பட்டுள்ளது. இதன் பின்னர் தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தால் இந்த தெப்பத் திருவிழா நடத்தப்படாமலேயே இருந்து வந்தது. ரெத்தினகிரீசுவரர் மலையின் மீது மழை பொழியும் போது அந்த மழை நீர் இந்த தெப்பக்குளத்தில் வந்து சேரும் வகையில் வழி வகை செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் முதல் தற்போது வரை குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் சுமார் 15 வருடங்கள் பிறகு அய்யர்மலை கோவில் தெப்பக்குளம் கடந்த மாதம் நிறைந்து வழிந்தோடியது. ​இதையடுத்து இந்த ஆண்டு தெப்பத் திருவிழா நடத்த சிவாச்சாரியார் மற்றும் கோவில் குடிபாட்டுக்காரர்கள் கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து இந்த ஆண்டு தெப்பத்திருவிழா நடத்தப்படுவதனெ முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று இரவு சுமார் 7 மணி அளவில் தெப்பத்திருவிழா நிகழ்ச்சியில் தெப்பக்குளம் சுற்றிலும் வண்ண விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் சுவாமி அம்பாளுடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தவாறு தெப்பத்தை சுற்றி வந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தெப்பத் திருவிழாவை காண குளித்தலை சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கானோர் ஆவலுடன் கண்டுகளித்து சுவாமியை வழிபட்டனர்.

Recommended