அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் தங்கமணியை லஞ்ச ஒழிப்புத்துறை குறி வைத்திருக்கிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சென்னை, நாமக்கல், சேலம் என தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் காலையிலிருந்து சோதனை நடக்கிறது. ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 69 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.