இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உலக நலனுக்காக 1008 சங்காபிஷேக விழா

  • 2 years ago
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உலக நலனுக்காக 1008 சங்காபிஷேக விழா நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் கார்த்திகை மாத சோம வாரத்தினை முன்னிட்டு உலக அமைதி வேண்டியும் மக்களின் நலன் கருதியும் நாட்டில் பரவி வரும் புதிய வகை ஒமிகிரான் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும் சிறப்பு யாகம் மற்றும் 1008 சங்கு அபிஷேக பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவாச்சாரியர்கள் பலர் வேதங்களை முறையாக ஓதி சிறப்பு வேள்வி யாகம் நடத்தினர். பின்னர் 1008 சங்குகளில் தீர்த்தங்களை நிரப்பி பூஜை செய்து அதனைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தினர். இருக்கங்குடி மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் கருணாகரன் தலைமையில் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர் ராமமூர்த்தி மற்றும் அறங்காவலர் குழு பூசாரிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Recommended