#MRVNEWS #விவாதிக்கவும், பதிலளிக்கவும் அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி !

  • 2 years ago
#MRVNEWS #குளிர்கால கூட்டத்தொடரில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் .

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக நேற்று பிரதமர் மோடி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூடின. அதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்கள் கலந்துகொண்டனர். குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது என்றும் அதனால் இதில் மக்களின் பல பிரச்சினைகள் குறித்து பேச வேண்டியுள்ளதால் எதிர்க்கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அத்துடன் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களும் முதல் கூட்டத் தொடரிலேயே ரத்து செய்வதற்கான மசோதா கொண்டுவரப்படும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்திருந்த நிலையில், இந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்தியா 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தொடர் இது. நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதிலளிக்கவும் அரசு தயாராக உள்ளது. நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. நாட்டின் வளர்ச்சிக்கு புதிய பாதை உருவாக்க வேண்டும். புதிய வகை ஒமிக்ரான் கொரோனா பரவிவரும் நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூட்டத்தொடர், பயனுள்ளதாக அமைய வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகின்றனர். விவாதம் செய்யுங்கள், அவமரியாதை செய்யாதீர்கள்" என்றார்.இதனிடையே நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து கட்சித் தலைவர்களுடன் லோக்சபா சபாநாயகர் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது .

Recommended