#templevision #tv24 #கோவையில் அஷ்டதக்ஷ புஜ மகா கால பைரவருக்கு 18 யாக குண்டங்களில் வேள்வி வழிபாடு |

  • 3 years ago
உலக அளவில் ஒரே கல்லில் துர்க்கை அம்மன், கால பைரவர் என மிகவும் பிரச்சத்தி பெற்ற கோவிலாக கோவை இராமநாதபுரம் பகுதியில் மட்டுமே இக்கோவில் இருந்து வருகிறது.இக்கோவிலின் 6ஆம் ஆண்டு ஜென்ம அஷ்டமி பெருவிழாவை முன்னிட்டு ஸ்ஸ்ரீ அலங்கார மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அஷ்டதக்ஷ புஜ மகா கால பைரவருக்கு கடந்த 25ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.தொடர்ந்து இன்று 18அஷ்டமா சித்திகளை தன்னுள்ளே கொண்ட மகா கால பைரவருக்கு 18யாக குண்டங்கள் அமைத்து அடியார்கள் திருக்காரங்களால் வேள்வி வழிபாடு,மற்றும் பஞ்சாமிர்தங்களால் அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து நாளை 27ஆம் தேதி காலை கால பைரவருக்கு அலங்கார தரிசனமும் ,அர்ச்சனை பூசணி தீப வழிபாடு, மற்றும் மாலையில் 108கிலோ சகல புஷ்பங்களை கொண்டு மகா புஸ்பாஞ்சனமும் மகா அன்னதானமும் நடைபெற உள்ளது..இதில் கோவில் கமிட்டியார், சிவன் மலை குழுவினர், அலங்காரியின் அடியார்கள் இயக்கம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.