#chithiraitv #தர்மபுரி அருகே 5 கிராம மக்களின் நலனுக்காக நேரில் களத்தில் களமிறங்கிய திமுக எம்.பி |

  • 3 years ago
தர்மபுரி ரயில்வே ஜங்ஷன் அருகே உள்ள வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் மேம்பாலம் அமைப்பதற்கு தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் நேரில் சென்று பார்வையிட்டு அதிரடி ஆய்வு மேற்கொண்டார். தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் அதனடிப்படையில் மத்திய அரசு மேம்பாலம் கட்டுவதற்கு அனுமதியளித்துள்ளது இருந்தபோதிலும் வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் சாலையில் கடைகள் வீடுகள் அதிகமாக இருப்பதால் மேம்பாலம் கட்டினால் அப்பகுதி முழுவதும் கடைகள் வீடுகள் பாதிக்கப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் எனவே அதற்கு மாற்றாக பாரதிபுரம் 60அடி ரோடு பகுதியில் இடத்தில் மேம்பாலம் கட்டுவது குறித்து தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் நேரில் சென்று அப்பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர் பாரதிபுரம் 60 அடி ரோடு மேம்பாலம் கட்டுவதற்கு இடம் சரியாக உள்ளது இங்கு மேம்பாலம் கட்டினால் வெண்ணாம்பட்டி சாலை மூடப்படும் என்று ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர் பாரதிபுரம் வழியாக பொதுமக்கள் மேம்பாலத்தை வழியாக செல்ல வேண்டாம் தெரிவித்தார் விரைவில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி விடும் என்று தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் அவர்கள் தெரிவித்தார்..

Recommended