#templevision24 #கோவை ஸ்ரீ ஆனந்த வேதாஸ்ரம வளாகத்தில் உள்ள பஞ்சமுக ஈஸ்வர ஆலயத்தின் கும்பாபிஷேக விழா

  • 3 years ago
கோவை ஸ்ரீ ஆனந்த வேதாஸ்ரம வளாகத்தில் உள்ள பஞ்சமுக ஈஸ்வர ஆலயத்தின் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..






கோவை மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான புதுப்பதி மலை கிராமத்தில் உள்ள மலை அடிவாரத்தில் அழகிய இயற்கை எழில் சூழலுடன் அமைந்துள்ள ஆனந்தா கோசாலை பஞ்சமுக வேதாஷ்ரம ஆலய வளாகத்தில் புதிதாக பணியபெற்ற ஈஸ்வர ஆலயத்தின் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.முன்னதாக விழாவையொட்டி முதல் கால,இரண்டாம் மற்றும் மூன்றாம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது.இதனை தொடர்ந்து கோவை காமாட்சிபுரி ஆதினம் ஞான குரு சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவனுக்கு பூஜைகள் செய்து, பின்னர் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.தொடர்ந்து,மகாதரிசனம் நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் தீர்த் த பிரசாதம் வழங்கப்பட்டது.பின்னர் மகா அபிஷேகம்,அலங்கார பூஜையுடன்,பத்து வித அலங்கார தரிசனம் நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீஆனந்தா கோசாலை பிரம்மரிஷி ஈஸ்வரன் குருஜி செய்திருந்தார்.விழாவில் முக்கிய விருந்தினர்கள் ஜன்தி லால்,அசோக் மேத்தா, முன்னால் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் உட்பட மதுக்கரை,மாவுத்தம்பதி,நவக்கரை,புதுப்பதி உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பகத்ரகள் என பலர் கலந்து கொண்டனர்.