#chithiraitv #வெள்ள சேதம் - நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு - இன்று அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு |
  • 2 years ago
தஞ்சாவூர் : தொடர் மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை முதல்வர் ஆய்வு தஞ்சையில் பயிர்சேதம் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி.

மதுக்கூர் அருகே அண்டமி கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அமைச்சர் பெரியசாமி தலைமையிலான 7 அமைச்சர்கள் குழு பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் பெரியசாமி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் மதுக்கூர் வட்டாரத்தில் தொடர் மழையால் 3700 ஹெக்டேர் சம்பா பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. சேத விவரங்களை கணக்கு எடுத்துள்ளோம். அவற்றை முதலமைச்சரிடம் அளிக்க உள்ளோம். வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கைகளை வேளாண்துறை அதிகாரிகள் மூலம் மேற்கொண்டுள்ளோம். மழை குறையும் பட்சத்தில் விரைவில் தண்ணீர் வடிந்து விடும். மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவாமல் தடுப்பதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதேபோல் விவசாய பணிகளுக்கு தங்கு தடையின்றி யூரியா உள்ளிட்ட எந்த வகை உரங்களும் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உரங்களும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நாளை தொடர் மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில முதல்வர் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
Recommended