#chithiraitv #கொள்ளிடம் ஆற்றின் நடுவே மாட்டிக் கொண்ட பசுமாடுகள் மீட்டுத் தரக்கோரி கோரிக்கை |

  • 3 years ago
சீர்காழி : கொள்ளிடம் ஆற்றின் நடுவே மாட்டிக் கொண்ட பசுமாடுகள், மீட்டுத் தரக்கோரி மாட்டின் உரிமையாளர்கள் கோரிக்கை!

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து உபரி நீரானது காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் திருச்சி முக்கொம்பு இருந்து சுமார் 35 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று கொண்டு உள்ளது. இருந்தபோதிலும் சுமார் ஒரு கிலோ மீட்டர் அகலம் கொண்ட ஆற்றில் முழுமையாக தண்ணீர் செல்லாமல் ஆற்றின் இரு கரையோரங்களிலும் முழுமையாக தண்ணீர் செல்கிறது இந்நிலையில் ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டில் கொள்ளிடம், வல்லம்படுகை பகுதி விவசாயிகளின் பசுமாடுகள் 27 மேய்ச்சலுக்கு சென்ற நிலையில் தற்போது இருபுறமும் தண்ணீர் செல்வதால் திடீர் நடுவே மாட்டிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறது. மேலும் தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகரிக்குமானால் தண்ணீரின் வேகத்தால் மாடுகள் அடித்துச் செல்ல நேரிடும் என்பதால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமான மாடுகளை ஆற்றில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.