Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/6/2020
Reporter - எஸ்.மகேஷ்

பள்ளிகளில் கிறிஸ்தவ மதபோதனைகளைக் கற்றுக்கொடுக்க பணியமர்த்தப்பட்ட இரண்டு ஊழியர்கள், மாணவிகளுக்கு செல்போனில் தொல்லை கொடுத்ததாக கிறிஸ்தவ அமைப்பின் நிர்வாகி போலீஸில் புகாரளித்திருக்கிறார்.

பள்ளி மாணவிகளுக்கு கிறிஸ்தவ அமைப்பின் ஊழியர்கள் இருவர் செல்போன் மூலம் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜோஷுவா கிருபாராஜ் என்பவர் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான், ஸ்கிரிப்சர் யூனியன் அண்ட் குழந்தைகள் ஸ்பெஷல் சர்வீஸ் மிஷன் கவுன்சிலின் இந்திய இயக்குநராக (Scripture Union & Children Special Service Mission Council of India) இருக்கிறேன். எங்கள் அலுவலகம் சென்னை அயனாவரத்தில் செயல்பட்டுவருகிறது. நாங்கள் கிறிஸ்தவ போதனைகளைப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்துவருகிறோம். இதற்காக சாமுவேல் ஜெய்சுந்தர் என்பவரை 1.4.2003-ல் ஊழியராக நியமித்தோம். பதவி உயர்வு பெற்ற அவர், ஆங்கிலத்துறையின் செயலாளராகப் பணியாற்றிவந்தார்.

Category

🗞
News

Recommended