சகுனங்கள் பலன்கள் குறித்து ஞான நூல்கள் பலவும் விரிவாக எடுத்துரைக்கின்றன. அவற்றிலிருந்து நாம் சில அபூர்வத் தகவல்களை அறிந்துகொள்வோம்.
சகுன பலனகள் சுப சகுனம், அசுப சகுனம் என்று பிரித்தறியப்படுகின்றன. சகுனம் போன்றே நிமித்தம் எனும் முறையிலும் பலன் சொல்லப்படுவது உண்டு. தானே நிகழ்வது சகுனம் என்றும், நாம் நிகழ்த்துவது நிமித்தம் ஆகும். உதாரணமாக ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்கும்போது ஆலய மணி ஒலித்தால், அது நல்ல அறிகுறியைச் சொல்லும் சகுனம் ஆகும். அதே காரியம் நல்லபடியாக நடந்தேறுமா என்று தெய்வச் சந்நிதியில் நாம் பூக்களைப் போட்டு அவற்றில் ஒன்றை எடுத்து, பலனை அறிவது நிமித்த வகை ஆகும். சிலர், சகுனம் நிமித்தம் இரண்டும் ஒன்றே என்றும் கூறுவார்கள்.
சகுனங்கள் பலன்கள் குறித்து ஞான நூல்கள் பலவும் விரிவாக எடுத்துரைக்கின்றன. அவற்றிலிருந்து நாம் சில அபூர்வத் தகவல்களை அறிந்துகொள்வோம். #religion #omensbenifits