இப்படி ஒரு 'மினி அமேசான்'-க்கு போயிருக்கிங்களா ?! Agumbe Forest | Falls | Travel | Tourism
  • 3 years ago
நம் வாழ்க்கை முழுதும் ஏதோ ஒரு விஷயம் நம்மை அண்டியோ, அரவணைத்தோ வந்து கொண்டே இருக்கும். அதுபோல், தமிழ்நாட்டுக்கு - கர்நாடகா என்று நினைக்கிறேன். ஏதோ வாட்ஸ்-அப் ஃபார்வேர்டு மெசேஜில் படித்ததுபோல் ஞாபகம். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தேவைப்படும்போது கர்நாடகா தேவைப்படுகிறது; தமிழ்நாட்டுக்கு ஒரு முதலமைச்சரை கர்நாடகாதான் தந்தது; தமிழ்நாட்டில் பிறந்த சசிகலாவுக்கு ஜெயில் தண்டனையைத் தருவதற்கும் கர்நாடகா தேவையாய் இருக்கிறது; இங்கே ஒரு சூப்பர் ஸ்டாரையும் கர்நாடகாதான் தர வேண்டியிருக்கிறது. இந்தமுறை எனக்கும் அது பொருந்திவிட்டதுதான் ஆச்சர்யம். நிற்க! என் ‘ஊர் சுத்தல்’ டைரியின் முதல் பக்கத்தில் இடம் பிடிக்கும் அளவுக்கு, மிகப் பெரிய த்ரில்லிங் நினைவுகளாக கர்நாடகாவில் உள்ள அகும்பே மழைக்காடுகள், (Agumbe) என் மெடுல்லா ஆப்லேங்கேட்டாவில் வெள்ளை ஆம்ப்ளேட் போல் பசுமையாய் இருக்கின்றன.

Reporter - தமிழ்த்தென்றல்
Recommended