"தல டக்கர் டோய்..!" ரசிகர்கள் தோனியை கொண்டாட காரணம் இதுதான்! #LoveYouDhoni

  • 4 years ago
Nippon வண்ணக்குரல் போட்டியில் பங்குபெற http://www.nipponpaintsaregamapa.com/


கிரிக்கெட் மேல் கொண்டிருந்த நம்பிக்கைதான் கராக்பூரின் அழுக்குப்படிந்த பிளாட்பாரத்திலிருந்து சிட்டாகாங்கின் பச்சைப்பசேல் புல்தரைக்கு அந்த ஜடாமுடி இளைஞனை இழுத்துவந்தது. தனக்குக் கீழ் திரண்ட இளம்பட்டாளத்தின்மீது அவர் வைத்த நம்பிக்கைதான் ஜொஹானஸ்பர்க்கில் முதல் டி20 கோப்பையை நம் கைகளில் தவழவிட்டது. அதன்பின் ரசிகர்கள் அவர்மீது வைத்த நம்பிக்கைதான் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக கோடிக்கணக்கானவர்களின் கனவுகளை சுமந்தபடி அவரை வெற்றிகரமாக ஓடச் செய்தது. ஆனால், இன்று ரசிகர்கள் அவர்மீது கொண்டிருந்த அதே அளவுகடந்த நம்பிக்கைதான் அவரை சல்லடையாகத் துளைத்து துவண்டுபோகச் செய்திருக்கிறது.

Recommended