வரலாற்றில் முதல் `சம்பவம்' செய்த பெண் சிங்கம்!

  • 4 years ago
சிங்கக் கூட்டத்தைப் பொறுத்தவரை தலைவனோ தலைவியோ கூட்டத்தின் ஓர் அங்கத்தினராகவே இருக்க வேண்டும். ஒரு கூட்டத்தில் பொதுவாக ஐந்து ஆறு வயது வந்த பெண் சிங்கங்களும் ஒரு வயது வந்த ஆண் சிங்கமும் குட்டிகளும் இருக்கும். கூட்டத்தின் அமைப்பில் பெண் சிங்கங்களே அதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. ஒரு கூட்டத்தில் இருக்கும் பெண் சிங்கங்கள் எல்லாம் நெருங்கிய உறவினர்களாகவே இருக்கும். ஆண் சிங்கங்களுக்கும் பெண் சிங்கங்களுக்கும் எப்போதாவது சண்டை மூளும். சண்டைகள் இரு பாலருக்கும் சில பல காயங்களுடன் முடிவுக்கு வரும். சில நேரங்களில் ஆண் சிங்கம் பெண் சிங்கங்களைக் கொல்வதும் நிகழும். ஆனால், ஆண் சிங்கத்தை, பெண் சிங்கம் கொன்றதாக வரலாற்றில் எங்குமே பதிவு செய்யப்படவில்லை.

Recommended