கைகழுவிவிட்ட அரசாங்கம் ! கைகொடுத்த மனிதநேயம் ! நீட் சம்பவங்கள் !

  • 4 years ago
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள 20 மையங்களில் 11 ஆயிரத்து 800 மாணவ - மாணவிகளுக்கு நீட் தேர்வு எழுதினர். மதுரையில் உள்ள மையங்களில் பெரும்பாலும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களே தேர்வு எழதுகிறார்கள். பல்வேறு சிரமங்களுடன் காலையிலேயே தேர்வு மையங்களுக்கு மாணவ - மாணவியர் தங்களது பெற்றோர்களுடன் வந்து சேர்ந்தனர். இந்நிலையில் மதுரை மேலூர் சூரக்குண்டையைச் சேர்ந்த அழகர்சாமி-தனலெட்சுமி என்ற தம்பதியின் மகள் டயானா நீட் தேர்வு எழுத அம்மா தனலெட்சுமியுடன் மதுரை பசுமலை செளராஸ்ட்ரா கல்லூரிக்கு வந்துள்ளார்.



car driver helps to neet exam student in madurai