மலைக்க வைக்கும் பர்மா-சென்னை வரலாறு!

  • 4 years ago
வியாசர்பாடியின் இயல்போடு ஒட்டாமல் தனித்து வாழும் இந்த மக்கள், 1750-களில் பிழைப்புக்காக பர்மா சென்று அங்கே வேரூன்றி வாழ்ந்த தமிழர்களின் சந்ததிகள். 1964-களில் பர்மாவில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக தமிழகத்துக்கு அகதிகளாக அழைத்து வரப்பட்டவர்கள். 50 ஆண்டுகளில் இம்மக்களின் வாழ்க்கை பெரும் மாற்றத்தை எட்டியிருக்கிறது. அரசு அதிகாரிகளாக, தொழிலதிபர்களாக, தனியார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளாக பெரும் உயரத்தைத் தொட்டிருக்கிறார்கள்