"தி.நகர்" பெயருக்கு பின்னால் இருக்கும் வரலாறு! | Sir Pitti Theagaraya Chetty's story

  • 4 years ago
‘சென்னையில் தியாகராயர் நகர் எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?” - பஞ்சத்துக்கு வந்து குடியேறியவர்கள் மட்டுமல்ல... பரம்பரை சென்னைவாசிகளும் கொஞ்சம் யோசிப்பார்கள்.

அவர்களிடம், ‘‘தி.நகர் தெரியுமா?” என்று கேட்டுப் பாருங்கள். தி.நகர் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டீர்கள். தி.நகர் ரங்கநாதன் தெருவில் இடியும் மிதியும் படுவதில் அடையும் சுகமே தனி.

தான் சம்பாதித்த சொத்தையும், தனது முன்னோர் தனக்குத் தாரை வார்த்துத் தந்துவிட்டுப் போன சொத்தையும் தனக்கு மட்டுமே எனக் கருதாமல் பாதியாய் பிரித்து பாமர மக்களுக்கு அர்ப்பணித்துவிட்டுப் போய்விட்ட தியாகத்தின் அரசனாக மதிக்கத்தக்க தியாகராயருக்கு செய்நன்றிக் கடனின் அடையாளமாகச் சூட்டப்பட்டதுதான் தியாகராயர் நகர். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பாக வெள்ளுடை தரித்து கம்பீரமாகக் காட்சி தருபவர்தான் தியாகராயர். அவர் பெயரால் அமைந்ததுதான் தியாகராயர் நகர். அதை தி.நகர் என்று சுருக்கிச் சொல்லுதல் பாவம்!

#COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India

Recommended