சிறுவன் கெஞ்சியும் விடாமல் அடித்து கொன்ற பரிதாபம்!

  • 4 years ago
சென்னை நெசப்பாக்கம் பாரதிநகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், உள் அலங்கார வேலை செய்துவருகிறார். இவர், மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மஞ்சுளா, மின்வாரியத்தில் பணியாற்றுகிறார். இவர்களுக்கு ரித்தேஸ் சாய் என்ற 10 வயது மகன் இருந்தார். இவர், அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்தார். இந்தநிலையில் ராமாபுரத்தில் உள்ள ஒருவீட்டில் இந்தி டியூசன் படிக்கச் சென்ற ரித்தேஸ் சாய், வீட்டுக்குத் திரும்பவில்லை. இதுகுறித்து கார்த்திகேயன் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் ரித்தேஸ்சாயைத் தேடிவந்தனர்.

Recommended