சசி வழியில் ஆட்சி ! என்ற 3 அமைச்சர்கள் பதவி நீக்கம் ?

  • 4 years ago
குற்றவாளி சசிகலாவை சிறையில் சென்று பார்த்து கருத்து கேட்டு ஆட்சி நடத்துவதாகக் கூறிய மூன்று அமைச்சர்களையும் ஆளுநர் உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, கழகப்பொருளாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அனுமதியின் பேரில் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கோரி ஜனாதிபதியிடம் மனு அளித்துள்ளோம். இதே கோரிக்கையை வலியுறுத்தி வருவாய் மாவட்டங்களில் வரும் எட்டாம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. மற்ற இடங்களில் தலைவர்கள் பங்கேற்பார்கள். இந்தப் போராட்டத்தில் கோடிக்கணக்கான தமிழக மக்கள் கலந்துகொள்ள வேண்டும்.

Recommended