சமந்தா கிப்ட் செய்த பைக் ! அஜித்துக்குப் பிடித்த பைக் !

  • 4 years ago
இப்படி, காதலியின் பரிசுமழையில் லேட்டஸ்ட்டாக நனைந்து வருபவர், சமந்தாவின் காதலர் நாக சைதன்யா. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவும் சமந்தாவும் நண்பர்களாகப் பழகியது, கிசுகிசுக்களில் அடிபட்டது, அதை நிஜமாக்கவே காதலர்களாக மாறியது என்று இருவரின் புரொஃபைல் பக்கங்களும் செம இன்ட்ரஸ்டிங். காதலராக இருக்கும்போதே மோதிரம், செயின், காஸ்ட்லியான ஷூக்கள் என்று வெரைட்டியாக பரிசுப் பொருட்களால் நாக சைதன்யாவைத் திக்குமுக்காட வைப்பாராம் சமந்தா. லேட்டஸ்டாக சில மாதங்கள் முன்பு, காதலரில் இருந்து கணவராக ‘ப்ரொமோட்’ ஆகிறார் நாக சைதன்யா. சென்ற மாதம், பெரியவர்கள் முன்னிலையில் காதலர்கள் கரம் கோத்த தினத்தை தெலுங்குத் திரையுலகமே கொண்டாடித் தீர்த்துவிட்டது.

Recommended