தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தால் அவமானம் !

  • 4 years ago
***பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறாரா சசிகலா?! அமைச்சர்கள் சிறை சந்திப்பின் பின்னணி ***
சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், பிப்ரவரி 28-ம் தேதிக்குள் (இன்று) சசிகலா, பதில் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி சசிகலா தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் பதில் அளிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, கட்சியின் மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களில் சிலரும், சசிகலாவால் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரனும் சந்தித்துப் பேசினர். அப்போது கட்சியின் உள்விவகாரங்களையும், தமிழக அரசியல் சூழ்நிலைகளையும் கேட்டறிந்த சசிகலா, அதற்கான ஆலோசனைகளையும் தெரிவித்தார். பெங்களுரு சிறையில் உள்ள சசிகலாவை அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர். அப்போது, தேர்தல் ஆணைய விவகாரம், சிறை மாற்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் மறு சீராய்வு மனு உள்ளிட்டவைகள் தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கட்சியின் உள்விவகாரங்கள், பன்னீர்செல்வத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Recommended