Kaatrai Irukintrai ¦ Jai ¦ Aravaazhi ¦ Bagath Prasanna ¦ Music Is Future

  • 5 years ago
Kaatrai Irukintrai | Jai | Aravaazhi | Bagath Prasanna | Music Is Future

பாடல் : அறவாழி
இசை : ஜெய்
Singer : முகேஷ்

Producer : பகத் பிரசன்னா

பல்லவி
--------------

காற்றாய் இருக்கின்றாய்
தமிழா !
வெறும்
காற்றாய்இருக்கின்றாய்
தமிழா !

இருக்கும் இடமே
தெரியாமல்
இருப்பது ஏன் என புரியாமல்

பன்னெடும் கால
பழமை பேசி !
பயன்தானென்ன
சொல் தமிழா !
பற்றிய நெருப்பை
பரப்பும் காற்றாய் !
பரவுவோம் நாம்
வா தமிழா ...!

பன்னெடும் கால
பழமை பேசி !
பயன்தானென்ன
சொல் தமிழா !
பற்றிய நெருப்பை
பரப்பும் காற்றாய் !
பரவுவோம் நாம்
வா தமிழா ...!

காற்றாய் இருக்கின்றாய்
தமிழா !
உயிர்
காற்றாய்
இருக்கின்றாய் !
தமிழா !

சரணம் 1
-----------------

இயல்பாய் நாம்தான்
யார் தமிழா !
இசைவாய் என்றும்
இருப்பதால் தானோ ...!
இயலாதவனாய் ஆனோமா ...?

இருப்பை சொல்ல
இறக்கை விரிக்க
இயல்வோம் நாமே
வா தமிழா ...!

புல்லாய் இருந்தால்
புழுவும் மிதிக்கும்
புலியாய் இருந்தால்
புவியை ஜெயிக்கும் !

புல்லா ..! புலியா ..!
புவிக்கு சொல்வோம்
வா தமிழா ..!

Bit பல்லவி
-------------------

காற்றாய்
இருக்கின்றாய்
தமிழா !
உயிர்
காற்றாய்
இருக்கின்றாய் !


சரணம் 2
-----------------

சங்கத்தமிழும்
சரித்திரபழமையும்
போதிதர்மனும்
அங்கோர்வாட்டும்
குறளும் கோவிலும்
சொல்லாமல் சொல்லுது
நம்பெருமை !


சங்கத்தமிழும் நமதேதான்
சரித்திரபழமையும் நமதேதான்
போதிதர்மனும்
நம் இனம் தான்
அங்கோர்வாட்டும்
நமதே தான்
கற்கோவில்களும்
திரு குறளும்
சொல்லாமல் சொல்லுது
நம்பெருமை !

நேற்றைய சரித்திரம்
நமதேதான் ...!
இன்றைய சரித்திரம்
யார் கையில் ...?
எவரிடம் இருந்தால்
நமக்கென்ன
எழுவோம் அலையாய்
வா தமிழா !

ஒவ்வொரு
முனையிலும்
ஒவ்வொரு
அசைவிலும்
ஒவ்வொரு
வியப்பிலும்
ஓரிடம் நமக்காய்
பெறுவோம்வா ..!

யாதொரு இடத்திலும்
யாதுமாகி
அவனியில் நாமே
அனைத்துமாகி

காற்றாய் இருக்கின்றாய்
தமிழா !
உயிர்
காற்றாய்
இருக்கின்றாய்
தமிழா !

காற்றாய் இருக்கின்றாய்
தமிழா !
உயிர்
காற்றாய்
இருக்கின்றாய் !
தமிழா !!!

Recommended