மருத்துவ மாணவர்கள் கையில் மெழுகு வர்த்தி ஏந்தி,மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள்-வீடியோ

  • 5 years ago
மருத்துவக் கல்வியில் தேசிய தகுதித் தேர்வை மத்திய அரசுக் கைவிட வலியுறுத்தி தஞ்சை மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கத்தினர் மருத்துவத்துறை பிணமாக்கப்பட்டதை நினைவு படுத்தும் வகையில் சவம் போல் வைத்து மெழுகு வர்த்தி ஏந்தி, கருப்பு தினமாக அனுசரித்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசு இந்திய மருத்துவக் கழகத்தை ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்குவதை கண்டித்தும், இந்தச் சட்ட வரைவில் மருத்துவ மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பின் இறுதி ஆண்டில் நெக்ஸ்ட் என்கிற தேசிய தகுதித் தேர்வைப் புகுத்துவதை கண்டித்தும்,இறுதியாண்டு மருத்துவப் படிப்பின்போது, தேசிய தகுதித் தேர்வு எழுத வேண்டும் என புதிய திட்டத்தை கொண்டு வருவதை கண்டித்தும்,தற்போதுள்ள நடைமுறையில் உள்ள தேர்வு முறைகளே தொடர வேண்டும். மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்கு, மாநில அரசுகள்தான் தனி நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும். மத்திய அரசின் நீட் நுழைவுத் தேர்வை திணிக்கக் கூடாது.மாநில அரசின் ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கு நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும்.மாநில உரிமைகளுக்கு எதிரான எக்ஸிட் தேர்வை எதிர்த்திட அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மருத்துவத்துறை பிணமாக்கப்பட்டதை நினைவு படுத்தும் வகையில், சவம் போல் நாற்காலியில் வைத்தும், கருப்பு தினமாக அனுசரித்தும், மருத்துவ மாணவர்கள் கையில் மெழுகு வர்த்தி ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களிட்டனர்.இதில், ஏராளமான மருத்துவ மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

des : Medical students carry wax on hand, slogans against central government

Recommended