புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இரயில் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்- வீடியோ

  • 5 years ago
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இரயில் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அறந்தாங்கி இரயில் நிலையத்தில் அறந்தாங்கி இரயில் பயணிகள் மற்றும் உபயோகிப்பாளர் சங்கம் சர்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காரைக்குடி முதல் அறந்தாங்கி, பேராவூரணி, மார்க்கமாக மயிலாடுதுறை வரை செல்லும் இரயில் பாதை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அகல இரயில் பாதைக்காக இரயில் சேவை நிறுத்தபட்டது. அகல இரயில்பாதைக்கான வேலைகளும் நிறைவு பெற்று சோதனை ஒட்டமும் நடத்தபட்டு வாரம் இருமுறை சோதனைக்காக பயணிகள் இரயிலும் ஒட்டபடுகிறது. அதில் குறிப்பாக அறந்தாங்கி பகுதியில் மலர் வணிகத்தில் மதுரைக்கு அடுத்து தமிழகத்தின் பெரிய வணிகம் கீரமங்கலம் பகுதி தான் இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு மலர் ஏற்றுமதி செய்யபடுகிறது அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் கடல் சார்ந்த பகுதிகளில் இப்பகுதி மிகவும் முக்கியமானது ஆகும் இங்கிருந்து மீன்,இரால், நண்டு,கணவாய், போன்றவை பெரும் அளவில் ஏற்றுமதி செய்யபடுகிறது இதற்க்கு எங்களுக்கு இரயில் சேவை மிகவும் தேவை எனவே மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து காரைக்குடி முதல் அறந்தாங்கி மார்க்கமாக சென்னை வரை இரயில் சேவையை துவங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறந்தாங்கி இரயில் பயணிகள் மற்றும் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கபட்டுள்ளது. கூட்டத்தில் அறந்தாங்கி வர்த்தகசங்க முன்னாள்,இன்னாள் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

des : Advisory meeting at Aranthangi railway station in Pudukkottai district.

Recommended