ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி படித்துறையில் தர்ப்பணம் செய்து வழிபாடு

  • 5 years ago
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி படித்துறையில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். இந்துக்களின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்சி காவிரிக்கரையிலும், ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை மற்றும் அய்யாளம்மன் படித்துறைகளில் புனித நீராடினர். பின்னர் அவரவர்களின் குடும்பத்தில் உயிர்நீத்த மூதாதையர்களின் நினைவாக பண்டிதர்களின் மூலம் தர்ப்பணம் கொடுத்தனர். இதுபோல முன்னேர்கள் எனப்படும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் என்னும் நீர்க்கடன் செலுத்த வேண்டியது ஒவ்வொருவர் கடமையாக இந்து தர்மத்தில் தெரிவிக்கப்படுகிறது. நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுத்தால் உயிர்நீத்த மூதாதையர்களின் ஆசி குடும்பத்தினருக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் பல்லாயிரக்கணக்கானோர் அம்மாமண்டபம் படித்துறையில் தங்களது முதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர். இதையடுத்து ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் மற்றும் திருவானைக்கோயில்களில் சென்று வழிபாடுசெய்தனர். இதனால் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்கள் குளிப்பதற்கு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு, பொதுமக்களின் அதிக வருகையையொட்டி மாநகர காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

des : Adi new moon to be worshiped by thousands of ancestors at Trichy Srirangam

Recommended