தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி ஐபிஎஸ் உடனான இந்த நேர்காணலில் அவர் தனது சொந்த வாழ்க்கை மற்றும் அலுவல் தொடர்பான வாழ்க்கையில் பின்பற்றிய நோ காம்ப்ரமைஸ் மனநிலையைப் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார். சிலை கடத்தல் தடுப்பு மற்றும் சிலை மீட்புத் துறை பற்றி அவர் பகிர்ந்துள்ள தகவல்கள் இதுவரை சாமான்யர்கள் அறிந்திராதவையாகவும் இருக்கக் கூடும். அதுமட்டுமல்லாமல் காவல்துறையில் எவ்விதப் பின்புலமும் இன்றி தனது மன உறுதி மற்றும் விடாமுயற்சியை பற்றிக் கொண்டு பணி ஓய்வுக் காலம் வரை அவர் வகித்த பதவிகள் அனேகம். தனது பள்ளிப்பருவம், இளமைக்காலம் முதல் இன்று பணி ஓய்வு வரை தான் கடந்து வந்த பல்வேறு தடைகளையும் அவற்றைத் தனது சுயமரியாதை மற்றும் சமூக அங்கீகாரத்துக்கு இழுக்கின்றி அவர் கைக்கொண்ட பாங்கையும் மிக அருமையாக இந்த நேர்காணல் வாயிலாக அவர் பகிர்ந்து கொள்கிறார்