வாடகை வீட்டில் வாழ்பவர்கள், வீடு தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள், சொந்த வீடு கட்டியவர்கள், வீடடற்றவர்கள் என்று அனைவருக்கும் பொருந்தக்கூடிய கதைக்களம் டுலெட். சென்னையில் வீடு எனும் பாதுகாப்பு உறைவிடத்திற்காக மனிதர்கள் படும் பாடுகளை, சந்திக்கும் சிரமங்களை மிக இயல்பாக சித்தரித்துள்ளார் இயக்குநர் செழியன்.