பெண் என்றால் அடக்கம் ஒடுக்கமாக இருக்க வேண்டும், ஆண் என்றால் அப்படித்தான் இருப்பான் என்னும் நாயக வழிபாடு செய்யும் திரைப்படங்கள், நெடுந்தொடர்கள், பத்திரிக்கைகள்.
பெண்களைப் போகப் பொருளாகக் காட்டும் நுகர்வுக் கலாச்சார விளம்பரங்கள்.
பாலுணர்வைத் தூண்டி அறிவை மழுங்கடிக்கக் கூடிய ஆபாசக் குப்பைகள் கொட்டிக் கிடக்கும் இணையம்.
உலகத்தையே உள்ளங்கைக்குள் மடக்கித் தந்திருக்கும் தகவல் தொழில்நுட்ப தொடர்புகள்.
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு, கற்பு, பத்தினித்தன்மை, ஒழுக்கம் என பெண்ணுக்கு அத்தனையும் வைத்துவிட்டு ஆணுக்கு ஆண்குறியை மட்டும் சமூக மதிப்பீடாய்க் காட்டும் சமூகம்.
சிந்தித்துப் பாருங்கள்! ஆண்களா இல்லை பெண்களா அல்லது இந்த சமூகமே தவறா? இந்தக் காணொளி பொள்ளாச்சி கொடூரத்திற்கான ஒரு பதிவு.