Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/28/2019
#IndianCorruptPolitician #corruptedindia #bjp #ADMK #TNpoliticians #gandhi #mahatmagandhi


இப்படிச் சொல்வது யார் தெரியுமா?
மகாத்மா காந்தியின் தனிச்செயலராக 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட பெரியவர் வி.கல்யாணம் அவர்கள் தான். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும் என்கிறீர்களா? காரணம் இல்லையா என்ன? காந்தியுடன் அருகிலிருந்து அவரது எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தவருக்கு இன்றைய அரசியல்வாதிகளின் பகட்டும் படாடோபமும் கண்டால் இப்படித்தான் சொல்லத் தோன்றும். காந்தி பெற்றுத்தந்த சுதந்திரத்தை இன்று நாம் பலவகைகளில் துஷ்பிரயோகம் செய்து வருகிறோம் என்பது உண்மையான காந்தியவாதிகளின் ஆதங்கமாக இருக்கிறது. அந்தக் கோபத்திலும், மன வருத்தத்திலும் தான் அவர் மேற்கண்ட வாசகங்களைச் சொல்கிறார். பிழை அவரது சொற்களில் இல்லை... அவரை அப்படிச் சொல்ல வைத்த நமது அரசுகளின் மேல் தான் இருக்கிறது.

வெங்கிட்ட கல்யாணம் எனும் வி. கல்யாணம் அவர்கள் மகாத்மா மறைந்தபின் எந்த அரசியல் ஆளுமைகளுடனும் இணைய விருப்பமின்றி காமராஜர் காலத்தில் பல்வேறு துறைகளின் கீழ் அரசு உயரதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்றதன் மின் பென்சன் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்திருக்கிறார். அத்துடன் மகாத்மாவின் கொள்கைகளைப் பின்பற்றி எவர் உதவியும் இன்றி 97 வயதிலும் தன் வேலைகளைத் தானே செய்து கொண்டு தனித்து வாழ்ந்து வருகிறார். அவருடனான நேர்காணல் தான் இது...

காந்தியைக் கொண்டாடுவதைக் காட்டிலும் அவர் காட்டிய வழியில் வாழ்ந்து காட்டுவதே உண்மையான காந்தியப் பற்று என்கிறார் பெரியவர் வி.கல்யாணம்.

விருந்தினர்: காந்தியவாதி வி.கல்யாணம்

சந்திப்பு: பத்திரிகையாளர் கார்த்திகா வாசுதேவன்

ஒளிப்பதிவு: சுனிஷ்

படத்தொகுப்பு: சவுந்தர்யா முரளி

Category
News & Politics

Category

🗞
News

Recommended