சிலருக்கு வயது ஏற... ஏற வாழ்க்கையின் மீதான பிடிப்பு குறையும் என்பது பொதுவான கருத்து. ஆனால் அந்தக் கருத்து சிலரது வாழ்க்கையில் தோற்று விடுகிறது. அவர்களுக்கு வயது ஏற ஏறவே வாழ்க்கையின் மீதான பற்றுதலும், தாம் ஆற்ற வேண்டிய கடமைகளின் மீதான பொறுப்புணர்வும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அப்படிப் பட்ட சமூகப் பொறுப்புணர்வு நிறைந்த மனிதர்களில் ஒருவரே ‘அடையாறு பாட்டி’ என்று அப்பகுதி மக்களால் கொண்டாடப்படக் கூடிய திருமதி காமாட்சி சுப்ரமணியம் அவர்கள். பாட்டியுடனான நேர்காணலில் அவரது அதீத உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளத்தான் செய்கிறது.