அதியமான் கோட்டையில் அமைந்துள்ள தக்ஷின காசி காலபைரவர் சிறப்பு அபிஷேகம்-

  • 5 years ago
அதியமான் கோட்டையில் அமைந்துள்ள தக்ஷின காசி காலபைரவர் ஆலயம் 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்து கால பைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலபைரவர் பக்தர்களுக்கு ராஜஅலங்காரத்தில் காட்சியளித்தார் ஏரளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து காலபைரவரை வழிபட்டனா் பக்தா்கள் தேய்பிறை அஷ்டமியை யொட்டி நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமானால் சாம்பல் பூசனியில் விளக்கினை கால பைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும். இந்த சிறப்பு வழிபாட்டின் போது தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங் களில் இருந்தும் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் பூசணியில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர், கோவில் அர்ச்சகர் கிருபாகரன் குருக்கள் செய்திருந்தனர்.

DES : The Kalbhairavar Temple is the only one of its kind in India. The first temple is located in Kazi. The second temple is located in Adiyamankotta, Dharmapuri district

Recommended