தாலிக்கு தங்கம் வழங்க 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இரண்டு பெண் அதிகாரிகள் கைது- வீடியோ
  • 5 years ago
பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் வழங்க 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சமூகநலத்துறை சார்ந்த இரண்டு பெண் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட கருப்பையன் அள்ளி கிராமத்தைச் சார்ந்த ரங்கம்மாள் என்பவரது மகள் சாந்தாமணி பட்டதாரியான இவர் திருமண நிதி உதவி பெற பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சமூக நலத்துறையில் கடந்த 3.9.18-ம் தேதி விண்ணப்பம் செய்திருந்தார். திருமணம் முடிந்து ஓராண்டு கழித்து தமிழக அரசு வழங்கும் தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி அவருக்கு கிடைக்காத நிலையில் சமூகநலத் துறை அதிகாரியிடம் பலமுறை கேட்டபோது, அவர்கள் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ரங்கம்மாள் மகன் செல்வக்குமார் தருமபுரி லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் கலந்த 4 ஆயிரம் ரூபாயை செல்வகுமாரிடம் வழங்கியுள்ளனர் . ரங்கம்மாள் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சமூகநலத் துறை அலுவலகத்தில் பணியாற்றி வரக்கூடிய சரோஜா மற்றும் சாந்தா இவர்களிடம் வழங்கியுள்ளார். இதனை மறைந்திருந்து கண்காணித்த மஞ்சுளா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்து அவர்களிடம் இருந்த ரசாயனம் தடவிய நான்காயிரம் ரூபாய் ரொக்கபணத்தை பறிமுதல் செய்த போலீஸார் சரோஜா மற்றும் சாந்தா ஆகிய இருவரை தருமபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

des : Two female welfare officers from Pennagaram Regional Development Office for bailing out 4000 bribe
Recommended