நிலுவையில் உள்ள போனஸ் தொகையை வழங்க வலியுறுத்தி பெல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • 5 years ago
வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையில் நிலுவையில் உள்ள போனஸ் தொகையினை உடனடியாக வழங்க வேண்டுமென கூறி பெல் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையில் 2000த்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த மே மாதம் வழங்கப்பட வேண்டிய போனஸ் தொகையானது தற்போது வரை வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.இதனை கண்டித்து ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

des : Bell workers protest demanding payment of outstanding bonuses

Recommended