நடிகர் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரம் தடை செய்யப்பட வேண்டும்- தமிழிசை- வீடியோ
  • 5 years ago
தூத்துக்குடியில் நோயால் பாதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறித்து அவரது மனைவியின் வேண்டுகோளின் படி தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேரில் சென்று பார்வையிட்டார். அவருக்கு மேலும் கூடுதல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாக கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் காப்பீடு திட்டமும், முதல்வரின் காப்பீடு திட்டமும் அனைவருக்கும் பலனுள்ளதாக, பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த இரு திட்டங்களில் தமிழகத்தில் மட்டும் ஒரு கோடியே 75 லட்சம் பேர் பயனடைய தகுதி பெற்றுள்ளனர் என்றார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், எந்த மதமும் தீவரவாதத்தை ஆதரிப்பது இல்லை. ஆனால் நடிகர் கமலஹாசன் இந்துக்களை தீவிரவாதிகள் என பேசிய பேச்சுக்கு இங்குள்ள அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவிப்பது கவலையாக உள்ளது. சந்திரசேகர் ராவ் பார்த்த பிறகு அவர்களுடைய நிலைபாடை திமுக தெரிவிக்காதது ஏன் என்றார். கமல்ஹாசன் இப்படி பேசுவதை பார்த்தால் தூண்டுதலின் பேரில் யாரே பின் இருந்து இயக்குகிறார்களோ என்ற ஐயம் உள்ளது. அவரை பின்னால் இருந்து இயக்குகின்ற சக்தி எது? அரசியல் கூட்டத்தில் இடைத்தேர்தலில் இதை பேசவேண்டிய அவசியம் இல்லை. வடஇந்தியாவில் பிரிவினைவாதமாக பேசிய காரணத்தால் சிலர் பிரச்சாரம் தடைசெய்யபபட்டுள்ளது. அதுபோல் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரம் தடை செய்யப்பட வேண்டும் என்றார். கமல் தனது கருத்துகளை திரும்ப பெற வேண்டும் என்றார். அதிமுக - பாஜக கூட்டணி அருதி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் எங்களுக்கு எந்தவித தோல்வி பயமும் கிடையாது என்றார்

des : Leader of the Bharatiya Janatha Party (BJP), Tamil Nadu, has said that actor Kamal Haasan should ban the election campaign
Recommended