ஆம்பூர் அருகே பைனான்ஸ் நிறுவனத்தில் 3.50 லட்சம் கொள்ளை

  • 5 years ago
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துனர் ராஜேந்திரன் .இவர் கடந்த 3 ஆண்டுகளாக குருவராஜபாளையம் பகுதியில் பைனான்ஸ் நடத்தி வந்துள்ளார் இந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூர் சுற்றுலா செல்ல பைனான்சில் பணிபுரிந்த அவரது உறவினர் மகனான யோகானந்தம் என்பவரிடம் பைனான்ஸ் அலுவலக சாவியைக் கொடுத்துவிட்டு வெளியூர் சென்றுள்ளனர் இந்தநிலையில் இன்று காலை யோகானந்தம் ராஜேந்திரனின் தொடர்பு கொண்டு பைனான்ஸ் அலுவலகத்தில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதிலிருந்த 3.50 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று உள்ளதாக செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்து சுற்றுலா முடிந்து ஊர் திரும்பிய ராஜேந்திரன் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கொள்ளை போனதற்கான தடயங்கள் எதுவும் இல்லாததால் பைனான்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த யோகானந்தம் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Recommended