ஓட்டு எந்திரத்தில் BJPயா?

  • 5 years ago
3 கட்ட லோக்சபா தேர்தல்
முடிந்துள்ள நிலையில்,
மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில்
பா.ஜ. சின்னம் தாமரைக்குக் கீழே
BJP என எழுதப்பட்டிருப்பதாக
புதிய சர்ச்சையை எதிர்க்கட்சிகள் கிளப்பியுள்ளன.
தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளன.
''BJP என இருப்பதை நீக்குங்கள்; அல்லது
எங்கள் சின்னத்தின் கீழ்
எங்கள் கட்சி பெயரை சேருங்கள்''
என எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.
அது, BJP அல்ல என்று,
தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
''தாமரை சின்னத்தின் அவுட்லைன்
தெளிவில்லாமல் இருந்தது;
அதை Bold செய்ய பா.ஜ. கேட்டது;
அதன்படி, தாமரை சின்னத்தின் கீழ்
தண்ணீர் திவலைகள் சேர்க்கப்பட்டது;
அது F P போல தெரிகிறது;
அவ்வளவுதான்; BJP அல்ல
என, ஆணையம் கூறியுள்ளது.

Recommended