மேடைதோறும் தரம் தாழ்ந்து பேசி வருகிறார் ஸ்டாலின்.. அன்புமணி குற்றச்சாட்டு- வீடியோ

  • 5 years ago

சேலம் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி, மேடைதோறும் மு.க.ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசி வருவதாக தெரிவித்தார். கொண்டலாம்பட்டி பகுதியில் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்த அவர், அதிமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் மத்தியில் மோடியின் ஆட்சி தொடரும் என்றும், சாதாரண விவசாயி என்ற நிலையில் இருந்து முதல்வராக உயர்ந்த பழனிசாமி மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். அதில் இந்தியாவிலேயே சிறந்த திட்டமான கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் பாடுபட்டு வருவதாகவும், கோதாவரி திட்டதை நிறைவேற்றினால் மேட்டூர் அணையில் எப்போதும் தண்ணீர் இருக்கும், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே இல்லாத நிலை உயரும். திமுகவில் கட்டப்பஞ்சாயத்து, பெண்களை கடத்துவது, கொலை கொள்ளை, வழிபறி, அராஐகமாக உள்ளது என தெரிவித்தார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது, அதிமுக கூட்டணியால் தான் வழங்க முடியும் என்றும், மேடைதோறும் கொச்சையாக, தரம் தாழ்ந்து பேசி வருபவர் ஸ்டாலின், நிச்சயமாக மக்களால் தோற்கடிக்கப்படுவார் என கண்டனம் தெரிவித்தார்.

des : Stalin has been downplaying the upturn. The DMK youth leader anbumani has been accused.