சாலையோரத்தில் தரமான முறையில் நிழற்கூடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை- வீடியோ

  • 5 years ago
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சத்தியமங்கலம் ரூ கோவை தேசிய நெடுஞ்சாலையில் வேடசின்னானூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்து மக்கள் பயணிகள் நிழற்கூடம் கட்டித்தரவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி «ம்ம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 3 இலட்சம் செலவில் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. நிழற்கூடம் அமைந்துள்ள பகுதியில் தற்போது புதியதாக சாலை தரம் உயர்த்தப்பட்டு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக நிழற்கூடம் அமைந்துள்ள பகுதியை விட சாலை மேடாக ஆகிவிட்டதால் தற்போது நிழற்கூடம் குழியான பகுதியில் பயணிகள் சென்று அமர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தற்போது பயணிகள் வெயிலில் நின்று பேருந்தில் ஏறி செல்கின்றனர். மேலும் நிழற்கூடம் கட்டுமானப்பணி தரமற்ற முறையில் நடைபெற்றுள்ளதால் பயணிகள் அமரும் இடம் மற்றும் படிக்கட்டுகள் காரை பெயந்து உடைந்து கிடக்கின்றன. பயணிகள் யாரும் நிழற்கூடத்தை பயன்படுத்தாததால் தேங்காய் மட்டைகள் குவித்து வைக்கும் இடமாக மாறிவிட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் அனைவரும் வீடுகட்டும் திட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிதி ரூபாய் 2.10 இலட்சம் மட்டுமே வழங்கப்படும் நிலையில் பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்காக ரூபாய் 3 இலட்சம் செலவு செய்தும் தரமற்ற முறையில் கட்டப்பட்டள்ளதால் இதில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது என அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டுவதோடு உடனடியாக இப்பகுதியில் பேருந்திற்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக சாலையோரத்தில் தரமான முறையில் நிழற்கூடம் கட்டித்தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

des : Request to build a lighthouse on a roadside for public convenience