கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி-வீடியோ

  • 5 years ago
ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் வயது 40.இவர் தற்போது கரூர் மாவட்டம் பெரிய வடுகப்பட்டி பகுதியில் டூவீலர் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.இப்பகுதியில் கந்து வட்டித் தொழில் செய்பவரிடம் ரூபாய் 40 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.அந்த பணத்தை திரும்ப செலுத்த வற்புறுத்தி நெருக்கடி கொடுத்ததால் மனமுடைந்த அந்தோணிராஜ் தனது மனைவி தனது இரண்டு குழந்தைகள் உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர் திடீரென குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பகுதி உள்ளதால் அங்கு 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த சூழலில் காவல்துறையினரின் கண்களில் மண்ணை தூவி விட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.இதனைக் கண்ட காவல்துறையினர் அவரது நடவடிக்கையை தடுத்து நால்வரையும் மீட்டு தாந்தோணி காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

des : The district collector's office with the family tried to fire before Kantavatti harassment