இளம் வாக்காளர்களை கவர புது முயற்சி- வீடியோ

  • 5 years ago
தூத்துக்குடியில் புதிய இளம் வாக்காளர்களை கவரும் வகையில் வாக்களர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பிக்கும் இளம் வாக்காளர்களுக்கு கடல் சாகச விளையாட்டு ஒரு முறை இலவசம் என்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிப்பால் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.



18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள் வரும் மக்களவை தேர்தலில் வாக்களிக்க செய்யும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் இன்றும் நாளையும் சிறப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 1593 வாக்குசாவடிகளிலும் இன்று காலை முதல் மாலை ஐந்து மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.இந்நிலையில் இளைஞர்களை கவரும் வகையில் தூத்துக்குடியில் முத்துநகர் கடற்கரையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட கடல் சாகச விளையாட்டுகளில் கலந்து கொள்ள இலவசம் அனுமதி வழங்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் ஏற்படுத்தியது.குறிப்பாக 18 முதல் 19 வயது நிறைவு பெற்ற இளைஞர்கள் ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் இரண்டுபுகைப்படங்களுடன் விண்ணப்பித்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு அனுமதி டோக்கன் வழங்கப்பட்டன.வாக்காளர்களுக்கு கயாக் (படகுக்குழாம்) / ஜெட் ஸ்கீ / ஸ்பீடு போட் / போட்டிங் / ரைட்ஸ் ஆகிய விளையாட்டுகளைவிளையாடுவதற்கு ஒருமுறை இலவச அனுமதி வழங்கப்பட்டன. அவர்கள் அதனை பயன்படுத்தி கடல் விளையாட்டுகளில் கலந்து கொண்டனர். இந்த முகாமில் விண்ணப்பித்தவர்கள் எனது வாக்கு எனது உரிமை என்ற பலகையில் கையெழுத்திட்டு சென்றனர்.

Vote rights for major.

Recommended