திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில்

  • vor 5 Jahren
THIRUNAGESWARAM 13..02.2019
நவக்கிரக தலங்களில்
ராகு ஸ்தலமான கும்பகோணம்
அருகேயுள்ள திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி ஆலயத்தில் ராகு பெயர்ச்சியை ஒட்டி சிறப்பு பூஜை ...
சுவாமி : அருள்மிகு திருநாகநாத சுவாமி.

அம்பாள் : அருள்மிகு பிறையணியம்மன்.

மூர்த்தி : ஆதி விநாயகர், கிரிகுஜாம்பாள், சரஸ்வதி, லட்சுமி, நவக்கிரகம், இராகு பகவான், சேக்கிழார், பாலறாவாயார், அழகம்மை, அறுபத்து மூவர்.

தீர்த்தம் : சூரிய புஷ்கரணி.

தலவிருட்சம் : செண்பகம்.

தலச்சிறப்பு : இது சேக்கிழாரின் அபிமான ஸ்தலம். சேக்கிழாரால் திருப்பணி செய்யப்பட்டது. இராகு பகவான் சுசீல முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்க மகாசிவராத்திரி அன்று நாகநாத சுவாமியை வழிபட்டு, சாப விமோசனம் பெற்றார். இத்திருக் கோயிலில் இராகு பகவான் மங்கள ராகுவாக நாகவல்லி நாககன்னி சமேதராய்க் காட்சி அளிக்கிறார். இராகு பகவானின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்படும் பால் நீல நிறமாக மாறுகிறது. இராகுவினால் ஏற்படக் கூடிய தோஷங்கள் அகல இராகுவுக்குப் பாலாபிஷேகம் செய்கின்றனர். இத்தலத்தில் நாகநாத சுவாமி அருகில் பிறையணியம்மன் சன்னதி உள்ளது. கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் அம்பாளின் பாதத்தில் நிலவு ஒளிபட்டுப் பாதத்தில் இருந்து சிரசிற்குச் செல்லும் காட்சி அற்புதமாகும். இத்தலத்தில் இறைவி கிரிகுஜாம்பாள், லட்சுமி, சரஸ்வதி ஆகியோருடன் அருள் பாலிக்கிறார். அம்பாளுக்குப் புனுகு மட்டுமே சாத்தப் படும். நவக்கிரகத் தலத்தில் இது இராகுத் தலமாகும். இராகு தோஷ பரிகாரத்திற்காக மக்கள் இங்கு அதிகம் வந்து வழிபடுகின்றனர்.

தலவரலாறு : ராகு பகவான், சுசீல முனிவரால் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டார். எனவே இத்தலத்து இறைவன் "நாகநாதர்" எனப் பெயர் பெற்றார். அன்று முதல் இது ராகு தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. சிறந்த சிவபக்த கிரகமாகிய ராகு, ராமேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி ஆகிய இடங்களில் மேன்மை பெற்று விளங்குகிறது. இருந்தபோதிலும் இத்தலத்தில் ராகுபகவான் தனது மனைவிகளான சிம்ஹி, சித்ரலேகாவுடன் மங்கள ராகுவாக தம்மை வழிபடுவோருக்கு பல நலன்களையும் அருளும் தருவது சிறப்பு. நாகத்திற்கு சிவன் அருள் செய்த தலம் என்பதால், நவக்கிரகங்களில் ஒருவரான ராகு, இத்தலத்தில் சிவனை வழிபட தேவியருடன் வந்தார். தினமும் சிவதரிசனம் பெற வேண்டி இங்கேயே மனைவியருடன் தங்கி விட்டார். பிற்காலத்தில், ராகுவுக்கு இங்கு தனி சன்னதி எழுப்பப்பட்டது. இவருடன் நாகவல்லி, நாககன்னி என்ற மனைவியரையும் சேர்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் அனுக்கிரஹம் புரியும் "மங்கள ராகு"வாக அருளுவது விசேஷம். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். ராகுவை, இந்த கோலத்தில் காண்பது அபூர்வம். கிரகங்களில் ராகு பகவான் யோககாரகன் ஆவார். இவரை வணங்கிட யோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்வார்.

வழிபட்டோர் : இராகு பகவான், ஆதிசேஷன், தட்சகன், கார்க்கோடகன், கெளதமர், நந்தி, நளன், பராசரர், பகீரதன், சேக்கிழார்.

பாடியோர் : அப்பர், சுந்தரர், சம்பந்தர்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

பூஜை விவரம் : ஆறு கால பூஜை.

திருவிழாக்கள் :

சித்திரை சிங்காரவேலர் புறப்பாடு,

வைகாசியில் சேக்கிழார் பூசவிழா,

விசாகப்பெருவிழா,

ஆனித் திருமஞ்சனம்,

ஆடிப்பூரம்,

விநாயக சதுர்த்தி,

நவராத்திரி,

Empfohlen