ரூ.5 லட்சம் வரை வருமான வரி இல்லை

  • 5 years ago

மாதச்சம்பளதாரர்களின் பல ஆண்டு கோரிக்கை
2019–20ம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில்
நிறைவேறியுள்ளது.

தனிநபர் வருமான வரி வரம்பு 2.50 லட்ச ரூபாயிலிருந்து
5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக,
நிதி அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரை சம்பளம் பெறுபவர்கள்,
இனி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
நிம்மதியாக இருக்கலாம்.
ஆண்டுக்கு 6.50 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள்கூட,
பிஎஃப், பங்குவர்த்தகம், பரஸ்பர நிதித்திட்டத்தில்
முதலீடு செய்திருந்தால் வரி செலுத்த வேண்டாம்.
இந்த அறிவிப்பால் 3 கோடி பேர் பயன் பெறுவார்கள்.
அரசுக்கு ஆண்டொன்றுக்கு 18,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
மற்றபடி வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.
ஆண்டுக்கு 5 லட்சத்து 1 ரூபாய் முதல்
10 லட்ச ரூபாய் வரை சம்பாதித்தால்
20 சதவீத வரி,
10 லட்சத்துக்கு அதிகமாக சம்பாதித்தால்
30 சதவீத வரி செலுத்த வேண்டும்.

Recommended