பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு.. 1100 பேருக்கு சில்வர் வாட்டர் பாட்டில் | Oneindia Tamil

  • 5 years ago
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூரில் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த அ.ம.செ. அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியின் 60வது ஆண்டு வைரவிழாவை கொண்டாடும் வகையில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தியும் வகையிலும், மாணவ, மாணவிகள் மத்தியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகளுக்கு சில்வர் வாட்டர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.

பள்ளி வளாகத்தில் வைத்து நடந்த இந்த வைரவிழா நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலா தலைமை வகித்தார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகளுக்கு முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் சில்வர் வாட்டர் பாட்டில்களை வழங்கினர். இந்த விழாவில் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Des : Silver Water bottle for 1100 students.

Recommended