கடையை மூடச் சொன்னதால் போலீசாருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதம்- வீடியோ

  • 5 years ago
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் கடந்த 14ம் தேதி இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. லாரியிலிருந்து 3 ஆயிரத்து 563 கிலோ குட்கா மற்றும் பான் மசாலாவை பறிமுதல் செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பெங்களுரில் இருந்து கரூருக்கு குட்கா மூட்டைகளை ஏற்றிக் கொண்டு செல்வதாக லாரியின் ஓட்டுநர் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரை சார்ந்த பாலசுப்பிரமணி தெரிவித்தார். கொங்கு மணி என்கின்ற சுப்பிரமணியை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சுப்பிரமணிக்கு சொந்தமானதாக கூறப்படும் கோவை சாலையில் உள்ள கொங்கு மெஸ் என்ற உணவகத்திற்கு சென்ற கரூர் நகர காவல் நிலைய போலீசார் அவற்றை மூடும்படி கூறினர். ஆனால் இந்தக் கடை செல்வமுத்து என்பவருக்கு சொந்தமானது என்றும், இவற்றை மூட வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி அக்கடையின் பணியாளர்களும், வழக்கறிஞர்களும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் கோவை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் எச்சரித்ததால் மறியலை கைவிட்டு கடைக்குள் சென்று விட்டனர்.

Des: The police argued with the police that the police told them to close the shop and engaged in road fighting

Recommended